தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்கள் தகாத சொற்களால் திட்டியதாக விசிக மாநில நிர்வாகி தீக்குளிக்க முயற்சி - விசிக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

திருவாரூர்: காவல் துறையினர் தன்னிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

vck partty member self immolation
vck partty member self immolation

By

Published : Jun 30, 2020, 9:31 AM IST

திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் கதிர். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் உதவியாளராக இருந்தவர். தற்போது அக்கட்சித் தொண்டர் அணியின் மாநில நிர்வாகியாக உள்ளார்.

மணல் கடத்தல் வழக்கில் பேரளம் காவல் துறையினரால் தேடப்பட்டுவந்த இவர் தலைமறைவாக இருந்து முன்பிணை பெற்றுள்ளார்.

விசிக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில், நேற்று (ஜூன் 29) கையெழுத்திட பேரளம் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் செல்வி தகாத சொற்களால் பேசியதாகக் கூறி திருவாரூர் கட்சி நிர்வாகிகள் முன்பாக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

விசிக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

அப்போது அருகிலிருந்த கட்சி நிர்வாகிகளும் காவல் துறையினரும் அவரைத் தடுத்துநிறுத்தி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தமிழ் கதிரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க... வீடு புகுந்து கர்ப்பிணியை தாக்கிய காதலன்: இளம்பெண் தீக்குளிப்பு

ABOUT THE AUTHOR

...view details