தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசு மதத்தின் பிடியில் இருக்கிறது -திருமாவளவன் சாடல்!

திருவாரூர்: தமிழ்நாடு அரசானது மதவாத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலு இல்லாமல், மதவாத பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு மதப்பிடியில் இருக்கிறது -திருமா சாடல்!

By

Published : Nov 13, 2019, 12:15 PM IST

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்களான மறைந்த முருகேசன், தங்கையன், களந்தென்றல் ஆகியோரது படத்திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மறைந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு உதவி தொகையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது இதுவரை தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. மதவெறி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு அரசு வலு இல்லாமல் இருக்கிறது. இச்சம்பவங்களால் அரசானது மதவாத சக்திகளின் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது.

திருமா செய்தியாளர்ச் சந்திப்பு

தமிழ்நாட்டில் புதியதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு எந்த வித நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கவில்லை” என்றார்.

இதையும் படிங்க...போக்குவரத்து நெரிசல், காற்று மாசு குறித்து ஜி.கே. மணி பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details