தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு - அனைத்து ஜமாத்தினர் பேரணி - Thiruvarur CAA Struggle

திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திருவிடச்சேரியில் அனைத்து ஜமாத்தினர் 100 அடி தேசிய கொடியுடன் பேரணியில் ஈடுபட்டனர்.

அனைத்து ஜமாத்தினர் பேரணி
அனைத்து ஜமாத்தினர் பேரணி

By

Published : Mar 13, 2020, 5:25 PM IST

Updated : Mar 13, 2020, 11:33 PM IST

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா திருவிடச்சேரியில் அனைத்து ஜமாத்தினர் ஹபீப் ரஹ்மான் தலைமையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை கண்டித்து 100 அடி நீளத்தில் தேசிய கொடியைப் பிடித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். அப்போது மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இப்பேரணிக்கு திருவிடச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் குத்புதீன் முன்னிலை வகித்தார். மேலும், இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜபருல்லாஹ், திமுக, கம்னியூஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அனைத்து ஜமாத்தினர் பேரணி

இதையும் படிங்க: சி.ஏ.ஏ.க்கு எதிராகப் போராடும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு

Last Updated : Mar 13, 2020, 11:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details