குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரம் சார்பில் இந்திய இறையாண்மை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூத்தாநல்லூர் நகரத் தலைவர் அபுபாஸ்லான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், பேச்சாளர் பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப்பொதுக்கூட்டத்தில், நாட்டு மக்களின் மன நிலையை கவனத்தில் கொண்டு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்ட சட்டங்களை வாபஸ் பெறவேண்டும். இந்தச் சட்டத்தை வாபஸ் பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இத்தகைய போராட்டத்திலிருந்து நாங்கள் ஒரு அங்குலம் கூட பின் வாங்க மாட்டோம் என்பதை பொதுக்கூட்டத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.