தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு’ - விவசாயிகள் குற்றச்சாட்டு! - திருவாரூர்

திருவாரூர்: நடப்பு சம்பா சாகுபடிக்கு இடவேண்டிய யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

uriya-problems

By

Published : Oct 24, 2019, 11:22 AM IST

திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரையில் நடப்பாண்டில் 3 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடியை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி உட்பட அனைத்து பகுதியிலும் நாற்று நடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பயிர்களுக்கு போதிய நீர்வைத்து கட்டப்பட்ட நிலையில் பயிர் பசுமை பெறவும், தண்டு வளர்ச்சிக்கும் அவசியம் உரமிட வேண்டும். ஆனால் தற்போது இடுபொருளான யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பயிர் நல்ல மகசூலை தரவேண்டுமெனில் காலத்திற்கு தேவையான அடியுரம் தெளிக்கவேண்டும். தற்போது அந்த உரமானது கிடங்குகளில் கிடைப்பதில்லை.

சம்பா சாகுபடிக்கு இடவேண்டிய யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு

ஏற்கனவே கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கிடங்குகளில் உரம் கிடைப்பதில்லை, தனியார் உரக் கடைகளில் கொள்ளை இலாபத்திற்கு உரங்களை விற்பனை செய்துவருகின்றனர்.

விவாசாயி செய்தியாளர் சந்திப்பு

எனவே அரசு விவசாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரங்களை தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதோடு எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

வாகன சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details