திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்! - மாநில அரசு
திருவாரூர்: பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
untouchability abolition party protest
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆத்துப்பாக்கம் நேமலூர் கிராமங்களில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும், பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.