தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி தாயார் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை! - திருவாரூர்

திருவாரூர்: திமுக இளைஞரணி மாநிலச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து திருவாரூரில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

udhayanithi

By

Published : Jul 13, 2019, 1:17 PM IST

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 37 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டனர். ஆகையால், இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பங்கு முக்கியமானதாகக் கருதப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகிகள் பலர் இவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, கடந்த ஜூலை 4ஆம் தேதி திமுக இளைஞரணியின் புதிய செயலாளராக உதயநிதிக்கு அக்கட்சியின் தலைமை பொறுப்பு வழங்கியது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞரணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உதயநிதி, இன்று திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி தாயார் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

இந்நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், திமுக தொண்டர்கள், உதயநிதி ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details