திருவாரூர் மாவட்டம், நன்னிலம், சர்க்கரை குள தெருவைச் சேர்ந்த துரைசாமியின் மகன் மணிகண்டன் (வயது 20). இவரும், இவரது நண்பர் முத்தழகனும் (வயது 25) இருசக்கர வாகனத்தில் நன்னிலத்திலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை முந்திச் செல்ல இவர்கள் முற்பட்டபோது, சிகார் பாளையம் என்ற இடத்தில் எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதினர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த முத்தழகனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.