திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பணங்குடிலிங்க வாசல் தெருவைச் சேர்ந்த மோகன் (வயது 28) இவர் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளை குப்பம் என்ற ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான பனங்குடி நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது வழியில் மூல மங்கலம் என்ற ஊரில் வீடு கட்டும் பணிக்காக சாலை ஓரத்தில் கொட்டியிருந்த எம். சாண்ட் மணல் குவியலில் வாகனத்துடன் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அவரை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.