திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் 1995-96ஆம் ஆண்டு ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 40 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
தற்போது இங்கு பெய்த கனமழையில், ஒரு தொகுப்பு வீட்டின் மேல்கூரை இடிந்து விழுந்தது. இதில் அதிலிருந்த ராமயன், அவரது மகன் ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சேதமடைந்துள்ள தொகுப்பு வீடு தொகுப்பு வீடுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசு ஆய்வு மேற்கொண்டு, பழுது நீக்கம் செய்து தர வேண்டும். ஆனால் 25 வருடங்களாக சேந்தமங்கலத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்து தரப்படவில்லை. இதனால் 40 தொகுப்பு வீடுகளும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் அதில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
சேதமடைந்துள்ள தொகுப்பு வீடு அரசு உடனடியாக தொகுப்பு வீடுகளை ஆய்வுசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி வீடு அபகரிப்பு - மீட்டுத்தரக் கோரி கண்ணீர் மல்க மனு