திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “திருவாரூரில் பதற்றமான 72 வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் கூடுதல் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தேர்தலுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும், பாதுகாப்பு உபகரணங்களும் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கிருமிநாசினி, வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பிற்காகத் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்கு சாவடி மையத்தில் இருப்பார்கள். மாவட்டம் முழுவதும் மத்திய காவல்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் இணைந்து மொத்தம் 2 ஆயிரத்து 442 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.