திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
திபாவளி பண்டிகை தினத்தன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அறிவழகன், கலைச்செல்வன், விமலா, வெள்ளிநாதன் ஆகியோர் வசிக்கும் தெருவிற்குள் சென்று அதே கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன், கருணாகரன், ராஜா, பூமிநாதன் ஆகியோர் அரிவாள், கத்தி, கட்டைகளால் தாக்கியுள்ளனர்.