திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆண்டிபந்தல் பகுதியில் காவல் ஆய்வாளர் சுகுணா, உதவி ஆய்வாளர் கமல்ராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆண்டிபந்தல் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் 110 லிட்டர் சாராயம் புதுச்சேரியிலிருந்து கடத்தி வருவது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பிரியதர்ஷன் - கோபிநாத் இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குடவாசல் பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த பிரியதர்ஷன் (22), சித்தாடி செட்டித் தெருவை சேர்ந்த கோபிநாத் (32) என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனம், சாரயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் கைது