திருவாரூர்:தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்றிரவு(அக்.28) தொடங்கிய கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பழைய பேருந்து நிலையம் அருகே மழை நீர் தேங்கி அதனுடன் கழிவு நீரும் சேர்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.
சாக்கடை நீருடன் மழை நீர் சேர்ந்து குளம் போல் காட்சியளிக்கும் அவலம் இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும், தேங்கிய மழைநீரை வெளியேற்ற நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சாக்கடை நீருடன் மழை நீர் சேர்ந்து குளம் போல் காட்சியளிக்கும் அவலம் எனவே உடனடியாக பேருந்து நிலையத்தில் சூழ்ந்துள்ள மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:கீழடி அகழாய்வு தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...