தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு: ஒரு ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு! - thiruvarur district news

திருவாரூர்: எருக்காட்டூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் பரவியதால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

farmer
farmer

By

Published : Sep 23, 2020, 5:08 PM IST

திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூரைச் சேர்ந்த விவசாயி தனசேகரன் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்றிரவு வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி ஐந்து ஏக்கரில் ஒரு ஏக்கர் வயல் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி செய்து 30 நாள்களே ஆன நிலையில் பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனசேகரன், அன்றிரவே அலுவலர்களுக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்து, கச்சா எண்ணெய்யை அகற்றுமாறு வலியுறுத்தினார். ஆனால், இன்று காலை வரையிலும் ஓஎன்ஜிசி அலுவலர்கள் எவரும் வரவில்லை. பிற்பகல் நேரத்தில் வந்த ஓஎன்ஜிசி அலுவலர்களை தடுத்து நிறுத்தி தனசேகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு

கச்சா எண்ணெயை உடனடியாக அகற்றாவிட்டால், மற்ற வயல்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தனசேகரன் எச்சரித்தார். இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் விவசாயி தனசேகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஓஎன்ஜிசி அலுவலர்கள் எண்ணெயை அகற்றி வருகின்றனர். இதேபோன்று கடந்த 2018ஆம் ஆண்டு தனசேகரன் நிலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இழப்பீடு தொகையாக ஒரு லட்சம் ரூபாய் ஓஎன்ஜிசி நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் பயிர் கருகியதற்கு மட்டுமே இழப்பீடு வழங்கியதாகவும் கச்சா எண்ணெய் பரவிய வயலின் மண்ணை தற்போது தனசேகரன் மாற்றியுள்ளதாகவும் அதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை என தனசேகரன்" குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:30ஆயிரம் மெட்ரிக் டன் நெல் தேக்கம்! விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details