தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் மாவட்ட கிளை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை - கிளை வாய்க்கால்களை இயந்திரங்கள் கொண்டு தூர்வார மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்: கிராமப்புறப்பகுதிகளில் உள்ள சி சேனல் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களை இயந்திரங்கள் கொண்டு தூர்வார மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்க்கால்களை இயந்திரங்கள் கொண்டு தூர்வார விவசாயிகள் கோரிக்கை
வாய்க்கால்களை இயந்திரங்கள் கொண்டு தூர்வார விவசாயிகள் கோரிக்கை

By

Published : Jun 5, 2021, 6:53 AM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது குறுவை சாகுபடிக்கான நாற்று தெளித்தல், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்டப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜூன் 3) டெல்டா மாவட்டங்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்திருந்தது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய விவசாயிகள்: "கடந்த ஆண்டு குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரில் கண்ணுக்குத் தெரிந்த ஆறுகள், வாய்க்கால் மட்டுமே தூர்வாரப்பட்டது. ஆனால், கிராமப் பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், அதன் கிளை வாய்க்கால்கள் எதுவும் தூர்வாரப்படாததால் காடுகள் மண்டி காட்சியளிப்பதால், தண்ணீர் கடைமடைப் பகுதிவரை சென்றடைவதில் சிரமம் ஏற்படும்.

கோரிக்கைகள்

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு, ஜுன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்குள் கிராமப்பகுதிகளில் உள்ள அனைத்து சி மற்றும் அதன் கிளை வாய்க்கால்களை இயந்திரங்கள் கொண்டு தூர்வாரி கொடுக்க, தமிழ்நாடு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details