திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ தமிழ்நாட்டில் வருகின்ற 24.11.2020, 25.11.2020, 26.11.2020 ஆகிய நாட்களில் வானிலை மைய அறிக்கையின் அடிப்படையில் மிக அதீத கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொது மக்கள் யாரும் ஆபத்தான நிலையில் உள்ள பாழடைந்த கட்டடங்களில் யாரும் தங்க வேண்டாம்”. எனத் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்! - ஆட்சியர் ஆய்வு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த கட்டடங்களில் பொது மக்கள் யாரும் தங்க வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார்.
tvr collector precaution announce inspection
இதற்கு முன்னதாக ஆட்சியர் சாந்தா வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் நடவடிக்கையாக முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் ஊராட்சியில் உள்ள பல்நோக்கு பேரிடர் மைய கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தேவையான அடிப்படை வசதிகளை செய்வது குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.