தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

30 நாட்களுக்குப் பட்டாசு கடை வைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் - ஆவணங்கள்

தீபாவளி பண்டிகையின்போது 30 நாட்களுக்கு பட்டாசு கடை வைப்பதற்கான தற்காலிக உரிமங்களைப் பெறுவதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

tvr collector order explosives sales licence diwali
tvr collector order explosives sales licence diwali

By

Published : Oct 18, 2021, 7:06 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு கடை வைப்பதற்கு உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை இ.சேவை மையம் அல்லது பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

கடை அமைக்கப்படவுள்ள இடத்தின் வரைபடம் (அசல்); இடத்தின் உரிமை குறித்த ஆவணங்கள் (அசல் மற்றும் 5 நகல்கள்), ரூ.500 –க்கான அசல் செலுத்துச் சீட்டு, முகவரிக்கான சான்று (குடும்ப அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு இவைகளில் ஏதேனும் ஒன்று), உள்ளாட்சி அமைப்பின் ரசீது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் 22.10.2021-க்குள் அளிக்க வேண்டும் என்ற கால அவகாசம் வரும்27.10.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் மீது காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்களால் வெடிபொருள் சட்டம் 1884 (ம) வெடிபொருள் சட்டம் விதிகள் 2008-இன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.

எனவே, தற்காலிகப் பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் வரும் 27.10.2021–க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆன்லைனில் அளிக்கலாம்' என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details