இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குடவாசல் பேரூராட்சியில் முழு ஊரடங்கு - ஆட்சியர் அறிவிப்பு - திருவாரூர் மாவட்ட ஆட்சியர்
திருவாரூர்: குடவாசல் பேரூராட்சி பகுதியில் ஜூலை 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்
குறிப்பாக திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரிப்பதன் காரணமாக, குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 28) முதல் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
இதன் காரணமாக அனைத்து வணிக நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூட வேண்டும். மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் வரவேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.