திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஆலங்காடு கிராம மக்கள், அப்பகுதி வழியே செல்லும் ரயில்வே கேட்டை சாலையாக பயன்படுத்தி வந்தனர். தற்போது, அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட போது, பொது மக்களுக்கு மாற்று வழியாக சுரங்கப்பாதை அமைத்து தரப்பட்டது.
வாகனங்கள் செல்ல முடியாதபடி சுரங்கப்பாதை - ஓட்டுநர்கள் அவதி - railway bridge damage people demands
திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால், ஓட்டுநர்கள் அவதி அடைந்துள்ளனர்.
railway-bridge-damage
அந்த சுரங்கப்பாதையானது அளவு குறைத்து கட்டப்பட்டதால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாதபடி, தற்போது மழைநீர் தேங்கியுள்ளதால் எந்த வாகனங்களும் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி தற்போதுள்ள சுரங்கப்பாதையை தற்காலிகமாக மூடிவிட்டு, ஏற்கனவே பயன்படுத்தி வந்த ரயில்வே கேட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.