தமிழ்நாடு

tamil nadu

அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை: பொதுமக்கள் அவதி!

By

Published : Apr 14, 2021, 8:38 PM IST

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை
அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசுப் பொது மருத்துவமனையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது திருத்துறைப்பூண்டி அரசுப் பொது மருத்துவமனையில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குறிப்பாக 20க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்து மக்களுக்கும் அந்தந்த அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது.

இதில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு நாளைக்கு 300க்கும் குறைவான கரோனா தடுப்பூசிகள் மட்டுமே சுகாதாரத் துறையினர் மூலம் வழங்கப்பட்டு வருவதால் அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து கிராமப்புற சுகாதார நிலையங்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படுவதால் தலைமை மருத்துவமனைக்குத் தடுப்பூசி தட்டுப்பாடு நீடித்து வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார நிலையங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்கவேண்டும் என மருத்துவ நிர்வாகமும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ’தமிழ்நாட்டிற்கு 54.85 லட்சம் கரோனா தடுப்பூசி வந்துள்ளது’ - ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details