திருத்துறைப்பூண்டியில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா மையம் - ttp corona experiment centre opening
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஜி.டி. பவுண்டேசன் வளாகத்தில் புதிய கரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா மையம்
திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தொடர்ந்து நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் திருத்துறைப்பூண்டி அண்ணா சாலையில் உள்ள ஜி.டி. பவுண்டேசன் வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் புதிய கரோனா தொற்று பரிசோதனை மையம் நேற்று (ஏப். 30) தொடங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு திருத்துறைப்பூண்டி புகழ்பெற்ற குழந்தைகள் பிரிவு மருத்துவர் ராஜா, மருத்துவர் இந்துமதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு புதிய கரோனா தொற்று பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது.