முகவர்கள், செய்தியாளர்களுக்கு கரோனா பரிசோதனை - Corona test for repoters at triuvarur
திருவாரூர்: மாவட்டத்தில் முகவர்கள், செய்தியாளர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் வருகின்ற மே 2ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இச்சூழலில் தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.
இந்நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், முகவர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் கரோனா தொற்று பரிசோதனை செய்த பிறகே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முகவர்கள், செய்தியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று பரிசோதனை செய்துகொண்டனர்.