தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசு செய்வதையே மாநில அரசும் செய்கிறது: திருச்சி சிவா

திருவாரூர்: தமிழ்நாடு இளைஞர்களை வேலையில்லா நிலையில் வைத்திருப்பதை மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசும் செய்வது விந்தையாக உள்ளது என திருச்சி சிவா கூறியுள்ளார்.

By

Published : Sep 20, 2019, 10:48 PM IST

trichy siva

திருவாரூர், தனியார் கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் வேலையில்லா திண்டாட்டம், இந்தி திணிப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர், "தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே துறையில் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசு கீழ் உள்ள மின்சாரத் துறையில் கூட வட மாநிலத்திற்கு இடமுண்டு, அந்த நிலையை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. இப்படி தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலையில்லா நிலையை மத்தியரசுக்கு இணையாக மாநில அரசும் செய்வது விந்தையாக உள்ளது.

திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு

இந்தியாவில் உள்ள எந்த மொழியும் பொதுமொழியாக வர முடியாது. ஒன்றை ஏற்க மற்றவர்கள் மறுப்பார்கள், உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி அதை வடக்கே உள்ளவர்கள் ஏற்பார்களா? மாட்டார்கள். இந்தி மொழிக்கு எழுத்து வடிவம் தேவநாகரிதான், சொந்தமாக எழுத்து வடிவம் கூட கிடையாது. அப்படிபட்ட மொழியை பொது மொழி என்றும், தொன்மையான தமிழ் மொழியை ஏற்க முடியாது என்று அவர்கள் கூறுவதைப் போல எங்களாலும் ஏற்க முடியாது" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு இளைஞர்களுக்கே தமிழ்நாட்டில் வேலையில்லையா? - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details