தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் மருத்துவமனையில் மூளை, தண்டுவட நோய்களுக்கான சிகிச்சை தொடக்கம் - திருவாரூர் மருத்துவமனையில் மூளை, தண்டுவட நோய்களுக்கு சிகிச்சை

திருவாரூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகளின் பயன்பாட்டுக்காக மூளை, தண்டுவட சிகிச்சைகளுக்கு உதவும் ஸ்கேன் கருவியை ஆட்சியர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

Throat Diseases at Thiruvarur Hospital
Throat Diseases at Thiruvarur Hospital

By

Published : Feb 28, 2020, 3:03 PM IST

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. சார்பாக ரூ. 22.5 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள சி-ஆர்ம் எனப்படும் அதிநவீன ஸ்கேன் கருவியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் இன்று தொடங்கி வைத்தார்.

Throat Diseases at Thiruvarur Hospital

இந்த அதிநவீன கருவியின் மூலம் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுகு தண்டுவட அறுவைச் சிகிச்சை போன்றவற்றை துல்லியமாக மேற்கொள்ள இயலும். இதுபோன்ற அறுவைச் சிகிச்சைக்காக திருவாரூர் நோயாளிகள் தஞ்சாவூர் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு வந்த நிலையில், இனி இங்கேயே (திருவாரூர்) சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

Throat Diseases at Thiruvarur Hospital

முன்னதாக, பொதுமக்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டுக்காக தனியார் வங்கி மூலம் ஏடிஎம் இயந்திரம், மருத்துவமனை கட்டட வளாகத்தில் புதிதாகத் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன், ஓ.என்.ஜி.சி. காவிரி அசட் செயல் இயக்குநர் செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Throat Diseases at Thiruvarur Hospital

இதையும் படிங்க: சட்ட அலுவலர்கள் பாலியல் புகாரில் சிக்கினால் கட்டாய ஓய்வு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details