தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 ஆண்டுகளுக்கு பின், திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவை! - after 10 years

திருவாரூர்: 10 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டதையடுத்து பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காரைக்குடி

By

Published : Jun 1, 2019, 11:57 AM IST

திருவாரூர்-காரைக்குடி குறுகிய ரயில் பாதையானது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அகல ரயில் பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவந்தது. பத்து ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அகல ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு சென்ற மாதம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இதனைத்தொடர்ந்து இன்று இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையானது 160 கிலோ மீட்டர்களை உடையது. இதில் ஏராளமான பகுதிகளில் கேட் கீப்பர்கள் இல்லாத காரணத்தினால் திருவாரூர் முதல் காரைக்குடி சென்றடைய சுமார் ஆறு மணி நேரம் ஆகிறது. குறிப்பாக மொத்தமுள்ள 74 கேட்டுகளில் 60 கேட்டுகளில் கேட் கீப்பர் இல்லாததால் இத்தகைய காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் இதை சரிசெய்யும் வகையில் 2 மொபைல் கேட் கீப்பர்கள் ரயிலில் தொடர்ந்து பயணித்த வண்ணம் உள்ளனர்.

திருவாரூர் - காரைக்குடி ரயில்
மேலும் இப்பயணத்தில் கழிவறை வசதிகள் செய்யப்படாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே இந்தப் பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என இரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details