தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்'

திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்த நிலையில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் இது குறித்து ஈடிவி பாரத்திடம் உரையாடினார்.

வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார்
வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார்

By

Published : Nov 25, 2020, 7:56 AM IST

தமிழ்நாடு வேளாண் துறை செயலர் ககந்தீப்சிங் பேடி நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்த நாளை கடைசி நாள் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் 60 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே பயன்பெறுவார்கள் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்ததையொட்டி, நமது தளத்தில் செய்தியும் வெளியிடப்பட்டது.

இது தொடர்பான குழப்பங்களைக் களையும் விதமாக திருவாரூர் வேளாண் இணை இயக்குநர் சிவக்குமாரிடம் கேட்டபோது,”இந்த மாவட்டத்தில் 3.72 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30ஆம் தேதி கடைசியாக இருந்த நிலையில், இன்று (நவ.25) இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கடந்த 10 நாள்களுக்கு முன்பாகவே விவசாயிகளை பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வந்தோம்.

மழை அல்லது புயல் காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்த பின்னர் பயிருக்கு காப்பீடு செய்வது கடினம். விவசாயிகள் இன்றே கடைசி தேதி என்பதால் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். கிராம கூட்டுறவு வங்கிகளில் காப்பீடு செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதால் பயிர் காப்பீட்டு செய்யாத விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும்”என்றார்.

விவசாயிகள் டிசம்பர் 15ஆம் தேதிவரை பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனரே என்ற கேள்விக்கு,”டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பது என்பது சாத்தியமே இல்லை. புயல் இயற்கை பேரிடர் பாதிப்பு இல்லையென்றால்கூட 30ஆம் தேதி வரை கட்டிக்கொள்ளலாம். டிசம்பர் 15ஆம் தேதி என்பது சாத்தியமில்லை”எனப் பதிலளித்தார்.

வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் பேசிய காணொலி

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தென்னை விவசாயிகள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேங்காய்களை பறித்தும், மட்டைகளை வெட்டி அதன் உச்சியில் உள்ள எடையைக் குறைத்தும் முன்னெச்சரிக்கையாக வைத்துக் கொள்ளவேண்டும். நெற்பயிர் விவசாயிகள் வயலில் தண்ணீரை முழுமையாக வடியவைத்து வடிகால் வாய்க்கால்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:'விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'

ABOUT THE AUTHOR

...view details