திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமனி செருமாங்குலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்த். அவர் தனது வீடு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ராயபுரத்தைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் கர்ணாவூரைச் சேர்ந்த வீரகுமார் என்பவருடன், மன்னார்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ராயபுரம் நோக்கி வந்துள்ளார். இருசக்கர வாகனம் பாமனிசெருமங்கலம் என்னும் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக வீடு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த ஆனந்த் என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்டாலின், வீரகுமார் இருவரிடமும் விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றதால் விபத்து: 4 பேர் படுகாயம்