தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து இஸ்லாம் அமைப்பினர் போராட்டம்! - தவ்ஹீத் ஜமாஅத்

திருவாரூர்: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து திருவாரூரில் முஸ்லீம்கள் போராட்டம்

By

Published : May 4, 2019, 10:47 PM IST

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையன்று, தலைநகர் கொழுப்பு மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்கள், பிரபல விடுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சமபவங்கள் நடைபெற்றது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக பெறுப்பேற்றுள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து போராட்டம்

இந்நிலையில், இன்று திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டித்து தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பின் மாநிலச் செயலாளர் ஃபரூக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details