எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெங்காய விலை குறித்து அறிக்கை வெளியிட்டதையடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக திருவாரூரில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டில் வெங்காய விலையை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் பண்ணைக் கடைகளை மானிய விலையில் வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினால் மறுக்க முடியுமா? வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
மத்திய அரசு தொகுப்பிலிருந்து 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கோரப்பட்டது. முதற்கட்டமாக 13, 14 தேதிகளில் 500 மெட்ரிக் டன் வெங்காயம் தமிழ்நாட்டிற்கு வந்தடைய உள்ளது. ஜிபூம்பா என்றவுடன் வெங்காயம் வந்துவிடாது. எகிப்து, துருக்கியிலிருந்து வந்தவுடன் நிலைமை சீரடையும். இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தைக் கொண்டு ரூ.5000 முதல் 6000 வரை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
அமைச்சர் காமராஜ் செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. திமுக தயாராக இல்லை, அதன் காரணமாகவே நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அதை வரவேற்பதும் பின்னர் மேல்முறையீடு செய்வதுமாக செயல்பட்டுவருகிறது" என விமர்சித்தார்.
இதையும் படிங்க : வெங்காயம் பதுக்கல்: 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை!