Sugarcane Farmers Suffer in TN: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அதன் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், "தமிழ்நாட்டில் மறந்துபோன பாரம்பரிய விவசாய முறைகளை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், இந்தியா முழுவதிலும் அதனை இயக்கமாகக் கொண்டுசெல்ல முயற்சி எடுத்தவர் நம்மாழ்வார். அவரது கொள்கையை உலக நாடுகள் பலவற்றிலும் இன்று பின்பற்றுகிற நிலையை உருவாக்கியவர்.
விவசாயம் முடங்காது
தற்போதைய விவசாய உற்பத்தி முறைகள் நஞ்சாகிவிட்டன; மனிதனை நோயாளிகளாக மாற்றிவிட்டன; விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளை நஞ்சாக்கிவிட்டன. நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய வேண்டிய பொறுப்பு விவசாயிகளுக்கும், அரசுக்கும் இருக்கிறது.
அரசு இயற்கை வேளாண்மையைப் பயன்படுத்தி பாரம்பரிய வேளாண்மை முறைகளைக் கொண்டு உணவு உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த உலகமே முடங்கினாலும் விவசாயம் முடங்காது.
விவசாயிகள் உற்பத்தி செய்துகொண்டேதான் இருப்பார்கள் என்று 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தெரிவித்த நம்மாழ்வாரின் கருத்து இன்று கரோனாவால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு மத்திய அரசு நம்மாழ்வாரின் கொள்கையைப் பின்பற்றி பாரம்பரிய விவசாயம் இயற்கை உரங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அடிமாட்டு விலை