தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திமுகவிற்கு நினைவுப் பரிசு - காவிரி உரிமை மீட்பு

திருவாரூர்: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திமுகவிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

tn farmers gave memorable award to DMK
tn farmers gave memorable award to DMK

By

Published : Oct 20, 2020, 11:38 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாடு கடந்த மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், காவிரி உரிமை மீட்பில் திமுக பங்கேற்றதற்கு பாராட்டு தெரிவித்து, நினைவுப் பரிசு ஒன்றை வழங்கவிருந்தனர். ஆனால், திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் மறைவையொட்டி திமுக தலைவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது.

கரோனா தொற்றால் ஊரடங்கு கடந்த ஆறு மாதங்களாக இருந்துவரும் நிலையில், திமுக தலைவர்களை சந்தித்து பரிசு வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று (அக்.19) தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன் தலைமையில், மாநில துணை செயலாளர் எம். செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட விவசாய சங்க குழுவினர், திமுக திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணனை நேரில் சந்தித்து, நினைவுப் பரிசை வழங்கி திமுக தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

பின்னர் நினைவுப் பரிசைப் பெற்றுக் கொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.கலைவாணன் தலைமைக் கழகத்திற்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details