மார்ச் மாதம் டெல்லியில் நடைப்பெற்ற சமய மாநாட்டில் பங்கேற்றுவந்த திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 150க்கு மேற்பட்டோர் கரோனா தொற்று அறிகுறியுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்துவந்தனர்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பில் இருந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பு - கரோனா தொற்று இல்லை
திருவாரூர்: மத்திய பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர கண்காணிப்பில் இருந்துவந்த 79 பேருக்கு தொற்று இல்லாததால்அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
university
இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் அவர்களுடைய உறவினர்கள் நண்பர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 79 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரையும் அவர்களுது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.