தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துருக்கி போட்டியில் மன்னார்குடி இளைஞர் அசத்தல்! - ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில்

ஆசிய அளவிலான சீனியர் வலுதூக்கும் போட்டிகள் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றன. இதில் மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.

Tiruvarur youth gets bronze medal in turkey
வெண்கலம் வென்ற இளைஞர் கோவிந்தசாமி

By

Published : Jan 2, 2022, 11:09 AM IST

திருவாரூர் : ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மன்னார்குடி இளைஞருக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

ஆசிய அளவிலான சீனியர் வலுதூக்கும் போட்டிகள் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை, ஜப்பான், கஜகஸ்தான் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

66 கிலோ உடல் எடை பிரிவில் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவரது மகன் கோவிந்தசாமி (வயது 27) கலந்து கொண்டு ஸ்குவாட் மற்றும் டெட் லிப்ட் இறுதி போட்டியில் ஆசிய அளவில் 3ஆம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

வெண்கலம் வென்ற இளைஞர் கோவிந்தசாமி

ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கோவிந்தசாமிக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதையும் படிங்க : weightlifting champion: ஆசிய பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற திமுக எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details