திருவாரூர் நகராட்சியில் 250க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தேவையான நிலையில், தற்போது 80 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். குறைந்த துப்புரவு பணியாளர்கள் உள்ளதால் வேலைப்பளு காரணமாக விடுப்பு எடுக்க நேரிட்டாலும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விடுப்பு தராமல் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பணியாளர்கள் தொடர் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
துப்புரவு பணியாளரை தகாத வார்த்தையால் திட்டிய நகராட்சி ஆய்வாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நகராட்சி ஆய்வாளரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
திருவாரூர்: துப்புரவு பணியாளர்களை தற்கொலைக்குத் தூண்டும் நகராட்சி ஆய்வாளரைக் கண்டித்து 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே நேற்று துப்புரவு பணியாளர் மகேஸ்வரனை, நகராட்சி ஆய்வாளர் ராமசந்திரன் தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த ராமசந்திரன், விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து துப்புரவு பணியாளர்களுக்கு எதிராக செயல்படும் நகராட்சி ஆய்வாளர் ராமசந்திரனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆய்வாளர் ராமச்சந்திரன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும் துப்புரவு பணியாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.