தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வரும் சூழலில், தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலன் கருதி பொது முடக்கத்தில் தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதன்படி, தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு சில தளர்வுகளுடன்கூடிய சில விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுவெளியில் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிசொல்ல பேருந்துகள் இரண்டு நிமிடம் மட்டுமே நின்று செல்கிறது.
கார் ஸ்டாண்டாக மாறிய திருவாரூர் பழைய பேருந்து நிலையம்! - திருவாரூர் கார் ஸ்டேண்ட்
திருவாரூர் : பழைய பேருந்து நிலையத்தை கார் ஸ்டாண்டாக பயன்படுத்தி வருவது தொடர்பாக நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

bus
ஆனால், அங்கு தனியார் வாடகை வேன்கள், ஆட்டோக்கள், கார்கள் போன்றவற்றை நிறுத்தி அப்பேருந்து நிலையத்தை வாகன ஸ்டாண்டாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஆனால்,இவற்றை மாவட்ட நிர்வாகத்தினரும் நகராட்சியினரும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இதனை மாவட்ட நிர்வாகத்தினர் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.