தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருகும் பயிர்கள்: கருணை காட்டுமா அரசு? - Tiruvarur farmers request to open the dam for farming

திருவாரூர்: தண்ணீர் இல்லாமல் பல ஏக்கர் கணக்கான பயிர்கள் கருகி வருவதால், தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருகும் பயிர்கள்: கருணை காட்டுமா அரசு?
கருகும் பயிர்கள்: கருணை காட்டுமா அரசு?

By

Published : Oct 14, 2020, 9:27 PM IST

திருவாரூர் அருகே உள்ள புதுச்சேரி, அடி புதுச்சேரி, பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலமாக சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகளுக்கு ஓடம்போகியாற்றிலிருந்து பிரிந்து வரும் வெள்ளவாய்க்கால் தான் பாசன வாய்க்கால். தற்போது மேட்டூர் அணை தண்ணீர் முறை வைத்து ஐந்தாவது முறையாக திறந்து விடப்பட்டும், வெள்ள வாய்க்கால் 15 ஆண்டுகளாகவே தூர் வாரப்படாத காரணத்தால் தண்ணீர் கடை மடை வரை சென்று சேரவில்லை. இதனால் விவசாயிகள் தற்போது வரை மழை நீரை மட்டுமே நம்பி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஐந்தாவது முறையாக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தும் புதுச்சேரி பகுதி விவசாயிகளுக்குத் தண்ணீர் துளி கூட செல்லாததால் தற்போது சம்பா பயிர்கள் அனைத்தும் கருகத் தொடங்கி நிலங்கள் முழுவதும் வெடிக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

கருகும் பயிர்கள்: கருணை காட்டுமா அரசு?

இந்தப் பகுதிகள் முழுவதும் காவிரி நீர் பாயும் கடைமடைப் பகுதி என்பதால் தொடர்ந்து முறை வைக்காமல் 15 நாட்களுக்கு தண்ணீர் கொடுத்தால் மட்டுமே இப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விளைநிலங்களில் உள்ள கருகிய பயிர்கள் அனைத்தையும் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அலுவலர்களும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வெள்ளவாய்க்காலைத் தூர்வாரி முறை வைக்காமல் 15 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்க ஆறு வகை கருவிகள் - அசத்தும் நாகை மெக்கானிக்!

ABOUT THE AUTHOR

...view details