திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே திருவாரூர் -மயிலாடுதுறை செல்லும் சாலையில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று, கட்டுபாட்டை இழந்து திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த முதியவரை, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அசுர வேகத்தில் சைக்கிளை பறக்கவிட்ட கார்... பதைபதைக்கும் சிசிடிவி! - நன்னிலம் விபத்து சிசிடிவி
திருவாரூர்: நன்னிலம் அருகே அதிவேகமாகச் சென்ற கார் , சைக்கிள் மீது மோதியதில் அதில் வந்த முதியவர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருவாரூர்
சைக்கிள் மீது கார் மோதி விபத்து:
காவல் துறை நடத்திய விசாரணையில், படுகாயமடைந்த முதியவர் காக்காகொட்டூரைச் சேர்ந்த காத்தான்(65) என்பதும், காரை ஓட்டிவந்தது கடுவங்குடி கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் ராம மூர்த்தி என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ராமமூர்த்தியை நன்னிலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.