தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக்கில் சென்ற இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது - இளைஞர் கொலை

திருவாரூர் அருகே இளைஞர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

சதீஷ்
சதீஷ்

By

Published : Nov 18, 2021, 10:07 AM IST

திருவாரூர்: அகரதிருநல்லூர், காமராஜ் தெருவைச் சேர்ந்த செல்வமணியின் மகன் குமரேசன் (35). இவருக்கு சுதா என்ற மனைவியும் இரணியன் என்ற குழந்தையும் உள்ளனர். இரண்டு நாள்களுக்கு முன் குமரேசன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மாமனார் வீடான காணூருக்கு அரிசி மூட்டையுடன் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது முன்விரோதம் காரணமாக கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் அவர் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென குமரேசனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, தாங்கள் மறைத்துவைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே குமரேசன் உயிரிழந்தார். தொடர்ந்து சம்பவம் குறித்து திருவாரூர் நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலைசெய்யப்பட்ட குமரேசன் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகன் சதீஷ் (40) என்பவரைத் தனிப்படை காவலர்கள் கைதுசெய்தனர். தொடர்ந்து இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

இதையும் படிங்க: குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் - குற்றவாளிகளுக்கு வலைவீசும் சிபிஐ

ABOUT THE AUTHOR

...view details