தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா - Thiyagaraja temple at Thiruvarur.

திருவாரூர்: வரலாற்றுச் சிறப்பு மிக்க தியாகராஜர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

Thyagaraja Temple
Thyagaraja Temple festival

By

Published : Mar 4, 2020, 7:39 PM IST

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் அம்பாள் தேர் நிலையடி மண்டபம், நூறு ஆண்டுகள் பழமையானதால் இடிந்து சேதமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

இந்நிலையில் இந்த நிலையடி மண்டபத்தின் குடமுழுக்கு விழா இன்று காலை நடைபெற்றது. இதற்கான யாக சாலை பூஜை நேற்று தொடங்கி நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து வந்து அம்பாள் நிலையடி மண்டப விமான கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:தெலங்கானாவில் நடைபெற்ற ஆசியாவின் மிகப் பெரிய ஆதிவாசி திருவிழா

ABOUT THE AUTHOR

...view details