தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடியேற்றத்துடன் தொடங்கிய தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்ட விழா! - thiruvarur thiyagaraja temple azhith therotta festival flag hoisting

ஆசியாவின் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர ஆழித் தேரோட்ட திருவிழா நேற்று (மார்ச்2) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட திருவிழா!
கொடியேற்றத்துடன் தொடங்கிய தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட திருவிழா!

By

Published : Mar 3, 2021, 9:20 AM IST

திருவாரூர்: சைவ பாரம்பரியத்தின் சப்த விடங்கத் தலங்களில் முதன்மையான தலம் என்றும், தில்லை சிதம்பரத்துக்கு முன்னரே தோன்றிய தலம் என்றும் போற்றப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நேற்று (மார்ச்2) காலை நடைபெற்றது.

பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவுநாளில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்ற சிறப்புக்குரிய பிரமாண்டமான 96 அடி உயரமும் 400 டன் எடையும் கொண்ட ஆழித் தேரில் ஆரூரார் அமர்ந்து உலா வரும் திருக்காட்சி சர்வ தோஷ பரிகாரமாக கருதப்படுகிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட திருவிழா!

இத்தகைய சிறப்புமிக்க ஆழித் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு புனித கொடிமரத்திற்கு புனித நீரால் சிறப்பு முழுக்கு செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது ஆரூரா, தியாகேசா என ஏராளமான பக்தர்கள் முழங்கி மலர்களை தூவி வழிபாடு செய்தனர்.

பங்குனி உத்திரநாளில் மகா அபிஷேகம் நடைபெறும். பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் மார்ச் 25ஆம் தேதி நடைபெறும் எனக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :'சாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு... தேர்தல் ஆதாயம் பெற கூட்டுச்சதி!'

ABOUT THE AUTHOR

...view details