தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தேர்- முன்னேற்பாடுகள் என்னென்ன? - திருவாரூர்

திருவாரூர்: பிரசித்தி பெற்ற தியாகராஜசுவாமி திருக்கோயில் ஆழித் தேரோட்ட நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்

By

Published : Mar 15, 2019, 6:52 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தியாகராஜசுவாமி திருகோயிலில் கொடியேற்றம் கடந்த மாதம் 2ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து தேரோட்ட திருவிழா வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் தேர் முன்னேற்பாடுகள்- மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றஇக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் பக்தர்கள் வந்து செல்ல பேருந்து ஏற்பாடுகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கவும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


ABOUT THE AUTHOR

...view details