தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இதையும் மீறி கடைய அடைச்சா  தற்கொலை செஞ்சுக்குவோம்" - சத்தியம் செய்த மதுப்பிரியர்கள் - Tasmac holiday in thiruvarur

திருவாரூர்: புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற இடைதேர்தலையொட்டி திருவாரூர் மாவட்ட மது கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது அம்மாவட்ட மதுப்பிரியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wine shop holiday in thiruvarur

By

Published : Oct 19, 2019, 10:15 AM IST

புதுச்சேரியில் வரும் 21ஆம் தேதி காமராஜ் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரி அருகாமையில் உள்ள மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், திருவாரூர் மாவட்ட மதுபான கடைகளுக்கும் இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் நாளான 21ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 24ஆம் தேதியும் விடுமுறை நாளாக அறிவித்து அக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபானம் இல்லையென்றாலே மரண வலியை உணரும் மதுப்பிரியர்கள் இதை சும்மா விடுவார்களா? இந்த விடுமுறை சட்டவிரோத மது விற்பனைக்கு வழிவகுக்கும் என்று சிலர் அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். 'நாங்கள் போதையிலும் தெளிவாக பேசுவோம்' என்று உளறும் அவர்கள், "திருவாரூருல சட்டமன்ற தேர்தல் நடந்தப்ப புதுச்சேரியில கடைய அடைக்கவா செஞ்சீங்க.. இப்ப மட்டும் என்னவாம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மதுபானக்கடைகளுக்கு இந்த மூன்று நாட்கள் விடுமுறை அளிப்பது மடத்தனம் என்றும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

ஆதங்கம் தெரிவிக்கும் மதுப்பிரியர்கள்

"ஒரு குவாட்டர் அடிச்சாதான் எனக்கு தூக்கமே வரும்" என்று புலம்பும் அவர்கள் அரசின் இந்த அறிவிப்பு அவர்கள் தூக்கத்தை இழந்து தவிக்க போவதாகவும், இது பெரிய பாவம் என்றும் சொல்கின்றனர் மதுப்பிரிய புள்ளிங்கோக்கள். கடைசியில் என்னதான் நீங்கள் சொல்ல வருகிறிர்கள் என்று கேட்டால் "இதையும் மீறி கடைய அடைச்சா தற்கொலை செஞ்சுக்குவோம்" என்று அரசுக்கே பயம் காட்டுகின்றனர் இந்த மதுப்பிரியர்கள்.

இதையும் படிங்க: காந்தி ஜெயந்தியில் மது விற்பனை - கண்டுகொள்ளாத காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details