தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு வாகனங்களைப் பயன்படுத்தினால் வாகனங்கள் பறிமுதல் - எஸ்.பி. எச்சரிக்கை

திருவாரூர்: விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சிலை வாங்க செல்லுதல், தடையை மீறி ஊர்வலத்திற்காக வாகனங்களைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

thiruvarur-sp-warning-for-vehicle-owners-for-vinayakar-chathurthi
thiruvarur-sp-warning-for-vehicle-owners-for-vinayakar-chathurthi

By

Published : Aug 20, 2020, 10:11 AM IST

கரோனா தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறு வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்களை அழைத்து விநாயகர் ஊர்வலம் தொடர்பான தமிழ்நாடு அரசின் தடை உத்தரவு குறித்து விளக்கப்பட்டது.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி, சிலை வாங்கச் செல்லுதல் அல்லது சிலை நிறுவுதல், ஊர்வலம் செல்லுதல் போன்ற நிகழ்வுகளுக்கு வாகனங்களுடன் வாடகைக்குச் செல்வதோ, வாகனங்களை அனுப்புவதோ, பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

இதனை மீறி வாகன உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்கள் வாகனத்தைப் பயன்படுத்தினால், அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க...விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி வேண்டும்... உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details