திருவாரூர் தேரடி தெரு அருகே மானந்தியார் தெருவில் காலையில் மேய்ந்துகொண்டிருந்த பசுங்கன்றை நாய்கள் விரட்டியதால், பயந்துபோன கன்று அருகில் இருந்த கழிவுநீர் செல்லும் கால்வாயில் தவறிவிழுந்தது.
தொடர்ந்து நாய்கள் விரட்டியதால் சிமெண்ட் சிளாப்களால் மூடிய பகுதிக்குள் சென்று சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தது.
இதனையறிந்த அருகில் இருந்தவர்கள் நாய்களை விரட்டி, கன்றை மீட்க முயற்சித்து, மீட்க முடியாததால் திருவாரூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் கால்வாயில் சிக்கிக்கொண்ட கன்றை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். பின்பு அதைப் பத்திரமாக உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:முதல் ஆளாக நின்று எதிர்ப்பேன் - பாரதிராஜா எச்சரிக்கை!