தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைவரிசை காட்டி வந்த 3 பேர் திருவாரூர் போலீஸாரிடம் சிக்கினர் - Peralam Police arrest

திருவாரூர்: கொலை, கொள்ளை, சாராயக் கடத்தல் போன்ற தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை திருவாரூர் போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

கைவரிசை காட்டி வந்த 3 பேர்
கைவரிசை காட்டி வந்த 3 பேர்

By

Published : Nov 18, 2020, 9:45 AM IST

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள தண்டதோப்பு தெருவைச் சேர்ந்த பிரகாஷ்(43) முத்துவைரவன் (40)கோவில் பாண்டியன்( 44) ஆகியோர் அப்பகுதியில் அடிக்கடி கொலை, கொள்ளை, சாராய கடத்தல்,வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

பொதுமக்களின் புகாரை அடுத்து, மூவரையும், பேரளம் காவல் துறையினர் நீண்ட நாட்களாத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில், தலைமறைவாக இருந்த மூன்று பேரும் கையும் களவுமாக சிக்கினர். அவர்களை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட பேரளம் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாரடைப்பால் மனைவி கண்முன்னே கணவன் உயிரிழப்பு: ஓடும் பேருந்தில் நடந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details