திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அகர திருமாளத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களுக்கு மயான கொட்டகைக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி அமைத்து கொடுக்காததால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி தங்கள் செந்த பணத்தில் மண் சாலை அமைத்து அதனை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த மண் சாலையானது தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், சில நேரங்களில் தடுமாறி வாய்க்காலில் விழுந்து விடுவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.