திருவாரூரில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் பங்கேற்கத் தடை! - திருவாரூர் செய்திகள்
திருவாரூர்: இமானுவேல் சேகரன் ஜெயந்தி விழாவிற்குச் செல்ல திருவாரூர் மக்களுக்கு தடை விதித்து அம்மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரனின் 63ஆவது நினைவு தினம் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் 'ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று (செப்டம்பர் 11ஆம் தேதி) இமானுவேல் சேகரன் ஜெயந்தி விழா நடைபெறும். தற்போது அதிக அளவு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூரிலும் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் பரமக்குடியில் நடைபெறும் இமானுவேல் சேகரன் ஜெயந்தி விழாவிற்குச் செல்ல அனுமதி இல்லை, அதையும் மீறி செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.