தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு! - கரோனா நிவாரண நிதி

திருவாரூர்: வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆய்வு மேற்கொண்டார்.

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு!
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு!

By

Published : Jun 15, 2021, 10:42 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பருத்தி எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பருத்தி மூட்டைகளை ஏல முறையில் விவசாயிகள் வியபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி மூட்டைகள் வேளாண் ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் திடீரென ஆய்வு மேற்கொண்டு பருத்திகளின் தரங்கள், ஈரப்பதங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details