தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் கரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாயும், 14 வகை அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்வினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூன் 15) திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.